விஜய், அஜித் படங்களை அசால்டாக ஓவர்டேக் செய்த RRR – ரெண்டே நாளில் வசூல் இவ்வளவா!!

0
விஜய், அஜித் படங்களை அசால்டாக ஓவர்டேக் செய்த RRR - ரெண்டே நாளில் வசூல் இவ்வளவா!!
விஜய், அஜித் படங்களை அசால்டாக ஓவர்டேக் செய்த RRR - ரெண்டே நாளில் வசூல் இவ்வளவா!!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி, 25ஆம் தேதி ரிலீசான RRR திரைப்படம் இரண்டே நாட்களில் வசூலை வாரி குவித்துள்ளது.

வசூலைக் குவித்த திரைப்படம்:

தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான திரைப்படம் RRR.  மெகா பட்ஜெட் செலவில் உருவான இந்தப் படத்தை, பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கியுள்ளார். உலகம் முழுவதும், பான் இந்திய மூவியாக  கடந்த 25ஆம் தேதி இந்த படம் திரையரங்கத்தில் ரிலீஸானது. வெளியான நாள் முதலே, வசூலை வாரி குவித்து வரும் இந்த படம், மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. அதாவது இரண்டே நாளில் படம், 350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து  சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம், அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் சர்க்கார் ஆகிய படங்களின் வசூல் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட தியாகிகளின் கதையை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை குவித்து வருகிறது. இந்த படம் இன்னும் பல வெற்றிகளை குவிக்கும், என்பதற்கு  இந்த வசூல் விபரமே சாட்சி என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here