இனி முடி உதிர்வுக்கு குட் பாய் சொல்லிடுங்க., இந்த ஹேர் ஆயில் ஒன்னு போதும்., நல்ல ரிசல்ட் கொடுக்கும்!!

0
இனி முடி உதிர்வுக்கு குட் பாய் சொல்லிடுங்க., இந்த ஹேர் ஆயில் ஒன்னு போதும்., நல்ல ரிசல்ட் கொடுக்கும்!!

நம்மில் பலரும் தலைமுடி உதிர்வு மற்றும் அடர்த்தி குறைவு போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதனால் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த ஆயில்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இன்று நம் வீட்டிலேயே அற்புதமான மூலிகை குணம் மிக்க ஒரு இலையை வைத்து ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தேவையான பொருட்கள்:

  • ரோஸ்மேரி இலைகள் – 100 கிராம்
  • கடுகு எண்ணெய் – 50 கிராம்
  • விளக்கெண்ணெய் – 50 கிராம்
  • தேங்காய் எண்ணெய் – 50 கிராம்

செய்முறை விளக்கம்;

இந்த ஹேர் ஆயில் தயாரிப்பதற்கு முதலில் நாம் ரோஸ் மெரி இலைகளை வாங்கி கொள்ள வேண்டும். மேலும் இந்த ரோஸ்மேரி இலையை ஆன்லைன் அல்லது அருகிலுள்ள நாட்டு மருந்து கடைகளில் வாங்கி கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு அகன்ற பாத்திரத்தை வைத்து அதில் பாதி அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.

பள்ளி மாணவர்களே குட் நியூஸ்.., இத்தனை நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு மட்டும் தான்.., ஹரியானா அரசு உத்தரவு!!

பிறகு ஒரு சின்ன சில்வர் பவுலில் கடுகு எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஊற்றி கொள்ளவும். இப்போது இந்த பவுலை அந்த அகன்ற பாத்திரத்திற்குள் வைத்து டபுள் பாயில் முறையில் சூடாக்கவும். பிறகு அதில் ரோஸ்மேரி இலைகளை கட் செய்து அதில் சேர்த்துக் கொள்ளவும். மேலும் ஒரு 20 நிமிடங்களுக்கு பின் அடுப்பை ஆப் செய்துவிடவும். இப்போது இந்த எண்ணெயை ஒரு பாட்டில் ஊற்றி வைத்து வாரத்தில் 2 முறை தலைக்கு குளிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன் தேய்த்து வரவும். இதன் மூலம் உங்கள் கூந்தல் அசுர வளர்ச்சி அடைவதை நம்மால் காண முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here