ஒருநாள் தொடரில் உயர்ந்த மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா…, இலங்கை அணிக்கு எதிராக அதிரடி ஆட்டம்!!

0
ஒருநாள் தொடரில் உயர்ந்த மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா..., இலங்கை அணிக்கு எதிராக அதிரடி ஆட்டம்!!
ஒருநாள் தொடரில் உயர்ந்த மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா..., இலங்கை அணிக்கு எதிராக அதிரடி ஆட்டம்!!

இலங்கை அணிக்கு எதிராக, இந்தியாவின் ரோஹித் சர்மா அரைசதம் கடந்ததன் மூலம், புதிய மைல்கல்லை எட்டி உள்ளார்.

ரோஹித் சர்மா:

இந்திய அணியானது இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியை குவஹாத்தியில் விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரானது, 50 ஓவர் உலக கோப்பைக்கு வீரர்களை தேர்வு செய்வதில் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பவுலிங்கை தேர்வு செய்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில், பங்களாதேஷ்க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், கட்டை வீரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா மீது இந்த போட்டியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில், ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி உள்ளார்.

“சூர்யகுமார் பாகிஸ்தானில் பிறந்தால் இது தான் நடந்திருக்கும்”…, வெளிப்படையாக கூறிய சல்மான் பட்!!

இவர் இந்த போட்டியில், 67 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 83 ரன்களை அடித்து அசத்தி உள்ளார். இதன் மூலம், சர்வதேச அளவில் இதுவரை 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 9500 ரன்களை கடந்துள்ளார். இவர், ஒருநாள் தொடரில் 9537 ரன்களை எடுத்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here