“சூர்யகுமார் பாகிஸ்தானில் பிறந்தால் இது தான் நடந்திருக்கும்”…, வெளிப்படையாக கூறிய சல்மான் பட்!!

0
"சூர்யகுமார் பாகிஸ்தானில் பிறந்தால் இது தான் நடந்திருக்கும்"..., வெளிப்படையாக கூறிய சல்மான் பட்!!

சூர்யகுமார் யாதவ் நல்ல வேலை பாகிஸ்தானில் பிறக்க வில்லை. ஒருவேளை பிறந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ்:

இந்திய அணியின் டி20 போட்டியில் தவிர்க்க முடியாத வீரராக சூர்யகுமார் வலம் வருகிறார். கடந்த 2021ஆம் ஆண்டு முதல் சர்வதேச இந்திய அணிக்காக விளையாடி வரும் இவர், இந்த புத்தாண்டின் டி20 போட்டியில் சதத்துடன் ஆரம்பித்துள்ளார். இதுவரை, 45 டி20 போட்டிகளில் விளையாடிய இவர், 3 சதங்கள், 13 அரைசதங்கள் உள்ளிட்ட 1578 ரன்களை அடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் மூலம், குறைந்த இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். மேலும், சர்வதேச அளவில், டி20யில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்களில் 2வது இடத்தை பிடித்துள்ளார். தனது 30வது வயதில் இந்திய அணியில் இடம் பெற இவர், தொடர்ந்து அதிரடியாக விளையாடி பல சாதனைகளை படைத்து வருகிறார். இவரை குறித்து பல முன்னாள் வீரர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

ஐபிஎல் 2023: தமிழ் உட்பட 11 மொழிகளில் லைவ் ஸ்ட்ரீம் செய்ய ஜியோ நிறுவனம் திட்டம்மா?? வெளியான அப்டேட்!!

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரரான சல்மான் பட், நல்ல வேலை சூர்யகுமார் யாதவ் இந்தியாவில் பிறந்தார். இதனால் தான் 30 வயதில் இந்திய அணிக்கு தேர்வாகி, தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, பவுலர்கள் எப்படி பந்து வீச போய்க்கிறார்கள் என முன்கூட்டியே அறிந்து உள்ளார் என்று தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தானில் 30 வயதிற்கு மேல் ஆகி விட்டால் சர்வதேச அணிக்கு அறிமுக படுத்த மாட்டார்கள் என்று சுட்டிக்காட்டி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here