தல தோனியவே ஓரங்கட்டிய ரோஹித்.., ஒரே ஆண்டுல மொத்த ரெக்கார்டும் பிரேக்! இது தாங்க விஷயம்!!

0
தல தோனியவே ஓரங்கட்டிய ரோஹித்.., ஒரே ஆண்டுல மொத்த ரெக்கார்டும் பிரேக்! இது தாங்க விஷயம்!!

T20 போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக வெற்றிகளை பெற்றதன் மூலம் ரோஹித் இந்திய அணியின் முன்னாள் கேப்டனையே ஓரங்கட்டியுள்ளார்.

தோனி vs ரோஹித்

இந்திய அணி தற்போது தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் T20 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித், ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவான் என பலர் தலைமை தாங்கியுள்ளனர். அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பல T20 போட்டிகளில் கலந்து கொண்டது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதன்படி மொத்தம் 16 T20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ரோஹித் சர்மா ஒரே வருடத்தில் அதிக T20 போட்டிகளை வென்று கொடுத்த கேப்டன் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி 15 போட்டிகளில் வெற்றி பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.

ICC தரவரிசை பட்டியல் வெளியீடு.., பாபரையே பின்னுக்கு தள்ளி இந்திய வீரர் அசத்தல்.., அப்போ முதலிடம் யாருக்கு??

ஆனால் அவரின் இந்த ரெகார்டை தற்போது ரோஹித் முறியடித்துள்ளார். மேலும் ரோஹித் T20 தொடர்களில் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். இந்த பெருமையுடன் ரோஹித் T20 உலக கோப்பை தொடரையும் வென்று கொடுப்பாரா என பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here