வார்த்தைகளை பார்த்து பேசுங்க – பொன்னியின் செல்வன் புரொமோஷனில் விபரீதம்! கொந்தளித்த ரசிகர்கள்!!

0
வார்த்தைகளை பார்த்து பேசுங்க - பொன்னியின் செல்வன் புரொமோஷனில் விபரீதம்! கொந்தளித்த ரசிகர்கள்!!
வார்த்தைகளை பார்த்து பேசுங்க - பொன்னியின் செல்வன் புரொமோஷனில் விபரீதம்! கொந்தளித்த ரசிகர்கள்!!

அண்மையில் நடந்த பொன்னியின் செல்வன் பட புரொமோஷனில் மணிரத்தினம் மனைவி சுஹாசினி பேசியது தற்போது சர்ச்சையாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

பொன்னியின் செல்வன்:

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாகம் ஒன்று நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் இப்படத்தின் புரொமோஷன் வேலைகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படக்குழு படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆந்திர மாநிலம் சென்றிருந்தது. அங்கு மணிரத்னம் மனைவி சுகாசினி மேடையில் ரசிகர்களிடம் பேசினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவர் பேசியதாவது, இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நம் மண்ணில் எடுக்கப்பட்டது. அதனால் ஒருபோதும் அதை தோல்வி அடைய செய்யக் கூடாது. வெற்றியை நிலை நாட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். அதை கேட்ட நடிகர் விக்ரம் தமிழ் நாட்டில் வெறும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு எடுத்தோம் என்றும் இது இந்தியர்களின் படம் என்று கூறியுள்ளார்.

சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்த பிகில் பட நடிகை – கல்யாண சடங்குகளுடன் வெளியான வைரல் போட்டோ!!

இருவரும் பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி தஞ்சை பெரிய கோயிலின் சிறப்பை சொல்லும் இந்த படத்தில், இவங்க தமிழ் மண்ணை குறைவாக பேச வேண்டும் என்று ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர். மேலும், பல சாம்ராஜ்ஜியங்களை கட்டி ஆண்ட சோழ மன்னர்களின் படத்தை, இது போல் குறைத்து மதிப்பிடுவது எந்த வகையில் நியாயம் என காண்டாகி உள்ளனர். மேலும், ப்ரமோஷன் என்ற பெயரில் படக்குழு தெரிவிக்கும் வீண் பேச்சுக்களை தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here