இனிமேல் ரெஸ்டாரண்ட் போக தேவையில்லை.! வீட்டுலயே ஈஸியா பண்ணலாம் மெக்சிகன் ரைஸ்.!

0

மெக்ஸிகன் ரைஸ் இனிமேல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஈஸியா பண்ணலாம். வாங்க எப்படி பண்றதுனு பாப்போம்.

தேவையான பொருட்கள்

பாசுமதி ரைஸ், வெண்ணெய், குடைமிளகாய், வெங்காயத்தாள், இஞ்சி பூண்டு விழுது, சீரகம் ஒரு தேக்கரண்டி, தக்காளி பேஸ்ட் ஒரு கப், மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு மற்றும் எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை

பாசுமதி அரிசியில் சிறிது வெண்ணை கலந்து தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும். பின்பு வெங்காயம் மற்றும் குடைமிளகாவை நீல வாக்கில் நறுக்கி எடுத்து கொள்ளவும். அதன் பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம், வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்பு வெங்காயத்தாள் மற்றும் குடைமிளகாய் சேர்த்து மூன்றையும் சேர்த்து வதக்கவும். அதன் பின் இஞ்சி பூண்டு விழுது , உப்பு , மிளகாய் தூள் மற்றும் தக்காளி பேஸ்ட் போட்டு நன்கு வதக்கவும். எல்லாம் நன்கு வெந்ததும் ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து எலக்ட்ரானிக் குக்கரில் வைத்து வெந்ததும் பரிமாறவும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here