மக்களே உஷார்., அதிகரிக்கும் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம்! ஒரிஜினலை கண்டுபிடிக்க இந்த 17 இருக்கான்னு செக் பண்ணுங்க!!

0
மக்களே உஷார்., அதிகரிக்கும் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம்! ஒரிஜினலை கண்டுபிடிக்க இந்த 17 இருக்கான்னு செக் பண்ணுங்க!!
மக்களே உஷார்., அதிகரிக்கும் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம்! ஒரிஜினலை கண்டுபிடிக்க இந்த 17 இருக்கான்னு செக் பண்ணுங்க!!

கடந்த சில ஆண்டுகளாக கள்ள நோட்டு புழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதை தடுப்பதற்கு ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது புதிய 500 நோட்டுகளில் கள்ள நோட்டு உலா வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் மக்கள் யாரும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக 500 ரூபாய் நோட்டு நல்ல நோட்டா இல்ல கள்ள நோட்டா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? என்பது குறித்து ரிசர்வ் வங்கி டிப்ஸ் கொடுத்துள்ளது. அதாவது புதிய 500 ரூபாய் நோட்டில் 17 அடையாளங்கள் இருக்கிறது. அதை வைத்து 500 ரூபாய் நல்ல நோட்டா இல்ல கள்ள நோட்டா என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அவை என்னென்ன, எண்களில் எழுதப்பட்ட 500 தான் முதல் அடையாளம். அதற்கடுத்து அந்த 500க்கு கீழ் சதுர வடிவில் ரகசிய படம் இருக்கிறது. அதன் உள்ளே 500 எழுதப்பட்டுள்ளது. இதையடுத்து, தேவநாகரியிலும் 500 என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் 500 ரூபாய் நோட்டு நடுவில் காந்தி படம் இருக்கிறது. அடுத்து 5வது அடையாளம் Bharat மற்றும் India என நுண் எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும். அதையடுத்து பச்சை நிறத்தில் நூல் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது. 7 வது கவர்னரின் கையொப்பம் முத்திரையுடன் இருக்கும். 8வது 500 நோட்டின் வலது பக்கத்தில் காந்தி மற்றும் 500 மறைமுகமாக இருக்கும்.

தமிழக பள்ளி ஆசிரியர்கள் பிப்ரவரி மாத சம்பளம்., இந்தப் பணியை 24ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!!

9வது ஏறுவரிசையில் இருக்கும் நம்பர், 10 வது 500 என்று கலர் மாறும் மையில் எழுதப்பட்டிருக்கும். அதற்கடுத்து, 11வது அசோக சின்னம், 12வது பார்வை இல்லாதவர்கள் கண்டுபிடிக்க இருக்கும் 5 ரத்த கோடுகள். அதற்கடுத்து 13வது அச்சிடப்பட்ட ஆண்டு, 14வது ஸ்வச் பாரத் என்ற முழக்கம், 15வது மொழி பலகம், 16வது செங்கோட்டையன் படம் மற்றும் கடைசியாக 17வது அடையாளமாக தேவநாகரியில் 500 எழுதப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி பொதுவாக 500 ரூபாய் புது நோட்டின் அளவு 66 mm -150 mm – ல் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 17 அடையாளங்களை தெரிந்து கொண்டால் போது 500 ரூபாய் நோட்டு நல்ல நோட்டா எது, கள்ள நோட்டா எது என்பதை ஈசியாக கண்டு பிடித்து விடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here