புதிய கல்விக் கொள்கை – சீன மொழியை அதிரடியாக நீக்கிய மத்திய அரசு!!

0

புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கப்பட்டுள்ளது.

சீன மொழி நீக்கம்..!

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி கிடப்பில் உள்ள பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அந்த வரிசையில் பிரதமர் மோடி தலைமையில் கடந்த 29ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ‘புதிய கல்விக் கொள்கை 2020 க்கு திடீரென ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

புதிய கல்விமுறையின்படி பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படவுள்ளது. விருப்ப மொழித் தேர்வாக இந்திய, அந்நிய மொழிகள் பலவும் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழித்தேர்வு பட்டியலில் சீன மொழி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் கடன் தர மறுத்தால் நடவடிக்கை – நிர்மலா சீதாராமன் அதிரடி!!

இதன் மூலம் இந்தியாவில் பள்ளிப் பாடத்தில் இனி சீன மொழியான மாண்டரின் கற்க முடியாது. 2019ம் ஆண்டின் கல்விக்கொள்கையில் இடம்பெற்ற சீனா மொழியான மாண்டரின் தற்போது நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here