வங்கிகள் கடன் தர மறுத்தால் நடவடிக்கை – நிர்மலா சீதாராமன் அதிரடி!!

0

வங்கிகள் தகுதியான நிறுவனங்களுக்கு கடன் வழங்க மறுத்தால் நடவடிக்கை எடுப்பேன் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் நடவடிக்கை..!

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விருந்தோம்பல் துறையினர் கடன் தவணை செலுத்துவதை மேலும் தள்ளி வைக்க வேண்டும் அல்லது கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ரிசர்வ் வங்கியுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மத்திய அரசு ‘ஆத்மாநிர்பார் பாரத்’ திட்டத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அவசர கடன் உறுதி திட்டம் மூலம் மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில வங்கிகள் உத்தரவாதமில்லாமல் வழங்கப்படும் அக்கடன்களை தர மறுப்பதாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி. சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி!!

வங்கிகள் தகுதியான நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை மறுக்கக் கூடாது. அவ்வாறு மறுத்தால் அது குறித்த புகாரை எனக்கு அனுப்பலாம். நான் நடவடிக்கை எடுப்பேன். தொழில் துறையின் அவசர கடனுக்கு மேம்பாட்டு நிதி மையம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here