பீலா ராஜேஷ் மாற்றப்பட்டதில் உள் நோக்கமா..? டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது..? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்..!

0
Minister Jeya Kumar
Minister Jeya Kumar

தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் அவர்கள் நேற்று தீடிரென மணிமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில் ராதாகிருஷ்ணன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தற்போது விளக்கம் அளித்து உள்ளார்.

சுகாதாரத்துறை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே தடுப்பு நடவடிக்கைகள், அரசின் அறிவிப்புகள் என அனைத்திலும் மும்முரமாக ஈடுபட்டவர் பீலா ராஜேஷ் அவர்கள். அவர் நேற்று தீடிரென வணிக வரித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் 2012 முதல் 2019 வரை தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த மற்றும் தற்போது கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக இருக்கும் ராதாகிருஷ்ணன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என கூறப்பட்டது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு – அதிமுக சார்பில் மனு தாக்கல்..!

இந்நிலையில் சென்னை கொரோனா தடுப்பு அமைச்சர்கள் குழுவில் ஒருவரான ஜெயக்குமார் அவர்கள், பீலா ராஜேஷ் மாற்றப்பட்டதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை அது முழுக்க முழுக்க நிர்வாக சம்மந்தப்பட்ட நடவடிக்கையே என கூறினார். மேலும் கொரோனவை வைத்து அரசியல் செய்பவர்கள் மக்களால் தனிமைப்படுத்தப்படுவர் எனவும், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதை சூழலைப் பொறுத்து முதல்வர் அவர்கள் அறிவிப்பார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here