இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாதனை படைத்த RCB…  மும்பையை பின்னுக்கு தள்ளி அபாரம்!!

0

மகளிர் பிரிமியர் லீக் தொடரின் 2வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று  நிறைவடைந்தது. இத்தொடரில்  கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளும் கடைசி பந்து வரை சென்று மிகத் திரில்லர் ஆட்டமாக அரங்கேறி வந்தது. இத்தொடரின் இறுதிப் போட்டியில் RCB அணி சிறப்பாக விளையாடி முதல் முறையாக கோப்பையை தன்வசப்படுத்தியது. இந்நிலையில் இந்த அணி இன்ஸ்டாகிராமில் சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அதாவது RCB  நிர்வாகம் இன்ஸ்டா கிராம் பக்கத்தில் அணி வீராங்கனைகள் கோப்பையுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டது. அந்த புகைப்படம் பதிவிட்ட 9 நிமிடங்களில் 10 லட்சம் லைக்குகளை குவித்தது. மேலும் இன்ஸ்டாகிராமில் 12.7 மில்லியன் பின்பற்றுபவர்களை பெற்ற RCB அணி , ஐபிஎல் வரலாற்றில் அதிக ரசிகர்களை கொண்ட மும்பையை பின்னுக்கு தள்ளி  2வது இடத்தை பிடித்து இருப்பது சிறப்பிற்குரியது. இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரும் அணிகளை  கீழ் காணலாம்.

2024 TNPSC குரூப் 4 தேர்வர்களே., இதிலிருந்து தான் கேள்வி கேட்கப்படும்? டிப்ஸ்-ஐ யூஸ் பண்ணிக்கோங்க!!!


இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரும் அணிகள்:

1. சென்னை சூப்பர் கிங்ஸ் – 14.1M.
2. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 12.7M.
3. மும்பை இந்தியன்ஸ் – 12.6M.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here