அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா பெங்களூரு – ஐதராபாத் அணியுடன் பலப்பரீட்சை!!

0

ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி ஒரு வெற்றி பெற்றால், ‘பிளே ஆப்’ சுற்றுக்குள் நுழையலாம். இந்த நிலையில் ஐதராபாத் அணியை எதிர் கொள்கிறது.

வார்னர் அசத்தல் 

ஐக்கிய அரபு எமிரேட்சில் 13வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சார்ஜாவில் நடக்கும் 52வது லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. மும்பை அணி மட்டும் ‘பிளே ஆப்’ சுற்றுக்குள் நுழைந்து விட்டது. மற்ற 3 இடங்களுக்கு போட்டி காணப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பெங்களூரு அணியை பொறுத்துவரை, இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடலாம். ஆனால், தொடர்ந்து 2 போட்டியில் வீழ்ந்துள்ளது. இதற்கு, கேப்டன் கோஹ்லி, படிக்கல், டிவிலியர்சை மட்டுமே நம்புவது காரணம். பவுலிங்கும் சிக்கலை தருகிறது. சென்னைக்கு எதிரான போட்டியில் சஹால், வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ் இருந்தும் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தப்பட்டது.

ஐதராபாத் அணி இரண்டு போட்டியில் வென்றாலும், ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறுவது கடினம். கேப்டன் வார்னர், சகா, மனிஷ் பாண்டே சிறப்பாக செயல்படுகின்றனர். பந்து வீச்சில் ரஷீத் கான், தமிழகத்தின் நடராஜன் கை கொடுப்பது பலம். இதுவரை இரு அணிகளும் 15 போட்டியில் மோதி உள்ளன. இதில் இரு அணிகளும் தலா 7 வெற்றி பெற்றுள்ளன.

உத்தேச லெவன் அணி

பெங்களூரு: பிலிப், படிக்கல், கோஹ்லி (கேப்டன்), டிவிலியர்ஸ், குர்கீரத் சிங், சிவம் துபே, மோரிஸ், வாஷிங்டன் சுந்தர், சைனி, சிராஜ், சஹால்.
ஐதராபாத்: வார்னர் (கேப்டன்), சகா, மனிஷ் பாண்டே, வில்லியம்சன், விஜய் சங்கர், சமத், ஹோல்டர், ரஷீத் கான், நதீம், நடராஜன், சந்தீப் சர்மா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here