IND vs ENG டெஸ்ட்: ஒரே போட்டியில் 2 சாதனைகள்.. தொடர்ந்து அசத்தும் அஸ்வின்.!

0

இந்திய ஆடவர் அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4வது போட்டி கடந்த (பிப்ரவரி 23) தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக விளையாடி அசத்தினார்.

இதன் விளைவாக அவர் இரு சாதனைகளை படைத்துள்ளார். அதாவது இந்தியாவுக்கான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் இந்தியாவுக்காக இந்த டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலை கீழ் காணலாம்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக 5 விக்கெட்டுகள்:

முத்தையா முரளிதரன் – 67
ஷேன் வார்ன் – 37
சர் ரிச்சர்ட் ஹாட்லீ – 36
அனில் கும்ப்ளே – 35
ரவி அஷ்வின் – 35*

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here