பிரபல நாடக நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் கண்கலங்கிய ரசிகர்கள்!!

0

கடந்த ஆண்டில் இருந்தே திரைத்துறை பல சினிமா பிரபலங்களை இழந்துள்ளது. இதில் பல இறப்புகளுக்கு கொரோனா காரணமாக இருந்தாலும் மீதி இறப்புகள் பெரும்பாலும் மாரடைப்பு, விபத்து போன்றவைகளால் ஏற்பட்ட எதிர்பாராத மரணமாகவே உள்ளது. இதில் பாலிவுட் திரையுலகத்தினரும் விதிவிலக்கல்ல.

அதாவது தற்போது இந்தி, தமிழ் என பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்ட ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த பழபெரும் நடிகர் அரவிந்த் திரிவேதி காலமாகியுள்ளார். இவருக்கு வயது 82. இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி 300க்கும் அதிகமாக படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே உடல் நல குறைபாட்டால் அவதிப்பட்ட இவர் நேற்று மாரடைப்பால் காலமாகி ரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்தி உள்ளார். பிரதமர் மோடி உள்பட பலர் இவரின் இறப்புக்கு தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here