ரேஷன் கார்டு மட்டும் போதும், வங்கிகளில் ரூ.50 ஆயிரம் பெறலாம் – அமைச்சர் செல்லூர் ராஜு அறிவிப்பு ..!

0

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் அதை எதிர்த்து போராடி வருகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனாவை எதிர்த்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ரேஷன் கார்டு ஆவணத்தை வைத்து கூட்டுறவு வங்கியில் ரூ 50 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் செல்லூர்ராஜூ கூறியுள்ளார்.

செல்லூர் ராஜு

மதுரையில் உள்ள மாடக்குளம் அருகே 2000 பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மூளிகை பொடி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சத்து மாத்திரைகளை செல்லூர் ராஜு வழங்கினார். இதை தொடர்ந்து அவர் கூறியதாவது,”தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு அ.தி.மு.க. அரசும், அ.தி.மு.க. வினரும் நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். இதன் மூலம் பசி இல்லாத தமிழகம் உருவாக்கப்பட்டு உள்ளது.

மக்கள் மீது அக்கறை கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன்மூலம் அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. இதனை மு.க.ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழகம் முழுவதும் 98 ஆயிரம் மனுக்கள் அவரிடம் வந்ததாக பொய்யான தகவலை கூறுகிறார். தமிழ் நாட்டில் 32,965 ரேசன் கடைகள் மூலம் 1.88 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்களும், நிவாரணத் தொகை ரூ.1000-ம் வழங்கப்பட்டு உள்ளது.

மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு முதல்- அமைச்சர் ஆலோசனை வழங்கினாலும் மு.க. ஸ்டாலின் விமர்சிக்கிறார். அவரது குணமும், எண்ணமும் தவறானது என்பதை மக்கள் புரிந்து விட்டனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் இழந்த பொருளாதார வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளும் வகையில் கூட்டுறவு வங்கி சார்பில் பொதுமக்களுக்கு கடன் வழங்கும் முறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

Periyar's reforms facilitated Rajinikanth daughter's second ...

விவசாயிகள், வியாபாரிகள், நகைக் கடனாக கிராமுக்கு ரூ.3 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 69 பைசா மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. மேலும் சிறுகுறு வியாபாரிகள் பயனடையும் வகையில், ஒவ்வொருவருக்கும் தனி நபர் கடனாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கு ரேசன் கார்டை ஆவணமாக பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகையை 350 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தும் வகையில் திட்டம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

குடிமகன்கள் கஷ்டத்தை முதல்வரால் ...

குறைந்த காலத்தில் தொகையை செலுத்தினாலும் மீண்டும் கடன் பெற்றுக் கொள்ளலாம். எனவே தமிழகத்தை போல வேறு எந்த மாநிலத்திலும் மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட வில்லை. தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் வந்தால் எதிர் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வேளாண்மை துறை சார்பில் விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் வெட்டுக்கிளிகளை அழிக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு கூறியிருந்தார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here