
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தன்னை ட்ரோல் செய்தவர்கள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகா வருத்தம் :
தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் தமிழ் என அனைத்து மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கி National crush என்ற அடைமொழியுடன் வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், சமீபத்தில் வெளியான வாரிசு படம் வரை திரைத்துறையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஒரு காலகட்டத்தில், ராஷ்மிகா மாதிரி பொண்ணு கிடைக்கணும் என தவம் கிடந்தவர்கள் எல்லாம் இன்று அவரை ட்ரோல் செய்து பங்கமாக கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். இதற்கெல்லாம் காரணம், அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டது தான். இதைப் பார்த்த திரை பிரபலங்கள் உள்ளிட்ட நெட்டிசன்கள் பலரும், என்னங்க இப்படி ஆம்பள மாதிரி மாறிட்டீங்க, என இவரை கலாய்க்க ஆரம்பித்தனர்.
கல்யாணத்துக்கு No சொன்னா, இதான் நடக்கும்., பிளாக்மெயில் செய்த சூர்யா ஜோதிகா! சிவக்குமார் ஓபன் டாக்!!
இது குறித்து சோசியல் மீடியாவில் போஸ்ட் ஒன்றை போட்ட ராஷ்மிகா, முன்னாடி கொண்டாடுனவங்க எல்லாம் இப்போ கலாய்க்கிறாங்க, நான் மூச்சு விட்டா கூட குற்றம் சொல்கிறார்கள், சினிமாவில் நடிக்க கூடாது என்றெல்லாம் என்னை ஏளனமாக பேசுகிறார்கள் என அந்த பதிவில் புலம்பி தள்ளியுள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் நம்ம நேஷனல் கிரஷ் ராஷ்மிகாவுக்கா இந்த நிலைமை? என பரிதாபப்பட்டு வருகின்றனர்.