
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான சூர்யா ஜோதிகா தம்பதி, கல்யாணம் குறித்த சுவாரஸ்ய தருணங்களை சிவகுமார் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
சிவக்குமார் பேட்டி :
தமிழ் சினிமாவின் ஃபேவரைட் ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது, மேட் ஃபார் ஈச் அதர் ஜோடிகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிவகுமார், தனது மகன் சூர்யா திருமணம் குறித்த கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது காதல் விஷயத்தை பற்றி சொல்லிவிட்டு நாலு வருஷம் வரை காத்திருந்தார்கள். அதன் பிறகு, என்னிடம் வந்து நீங்க திருமணம் செஞ்சு வைக்கலைனா இப்படியே இருந்து விடுவோம் என கூறினார்கள். என்னை பொருத்தவரை, குழந்தையை பெற்று படிக்க வைத்து அவர்களுக்கு வேலை வாங்கி கொடுத்து சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால், அவர்கள் வாழ்க்கை பற்றி முடிவெடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு.
குடும்ப கஷ்டத்தை எல்லாம் முடித்துவிட்டு, தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு முழு சுதந்திரத்தை நாம் தான் வழங்க வேண்டும். அப்படித்தான் நான் சூர்யா ஜோதிகா திருமணத்தை நடத்தி வைத்தேன். என உருக்கமாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது.