ஜெயம் ரவியின் ஹிட் படத்தை அச்சு பிசறாமல் காப்பி அடித்த ஹிட் சீரியல்., அதுக்குன்னு ஒரு சீன் கூட மாறாமையா?

0
ஜெயம் ரவியின் ஹிட் படத்தை அச்சு பிசறாமல் காப்பி அடித்த ஹிட் சீரியல்., அதுக்குன்னு ஒரு சீன் கூட மாறாமையா?
ஜெயம் ரவியின் ஹிட் படத்தை அச்சு பிசறாமல் காப்பி அடித்த ஹிட் சீரியல்., அதுக்குன்னு ஒரு சீன் கூட மாறாமையா?

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் இனி வரும் காட்சிகள், ஜெயம் ரவியின் சம்திங் சம்திங் படத்தில் இடம்பெற்றது தான் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நினைத்தாலே இனிக்கும்:

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் ரேஞ்சில் போய் கொண்டிருக்கிறது. அந்த வகையில், சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்து நினைத்தாலே இனிக்கும் சீரியல், சில காரணங்களால் நேரமாற்றம் செய்யப்பட்டு அதிரடியாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியலில் நினைவை இழந்த பொம்மியை, சுயநினைவுக்கு திரும்ப வைக்க அவரது கணவர் சித்தார்த் பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில், தற்போது கிராமத்திற்கு சென்றிருக்கும் பொம்மியை கூட்டி வர சித்தார்த் சென்றிருக்கிறார். அங்கு அவருடைய ஊர்க்காரர்கள், சித்தார்த்துக்கு விவசாய நிலம் கொடுத்து விவசாயம் செய்ய சொல்லி டாஸ்க் கொடுக்கிறார்கள்.

National crush ன்னு சொல்லிப்புட்டு, இப்போ ஆம்பள மாதிரி ன்னு சொல்றாங்க! புலம்பி தள்ளிய ராஷ்மிகா மந்தனா!!

இந்த காட்சியை நீங்கள் எங்கேயோ பார்த்தது போல இருக்கலாம். அது வேறு எதுவும் இல்லை சம்திங் சம்திங் படத்தில் ஜெயம் ரவி திரிஷாவுக்காக, அவர் கிராமத்திற்கு சென்று விவசாயம் செய்வார். இந்த காட்சிகள், எல்லாம் அச்சு பிசறாமல் அப்படியே நினைத்தாலே இனிக்கும் சீரியலில் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், என்ன செயல் இதெல்லாம் எனக் கூறி சீரியல் டீமை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here