தமிழ்நாட்டில் வானில் பிறை தென்படாததால் நாளை முதல் ரம்ஜான் நோன்பு., தலைமை காஜூ தகவல்!!!

0
தமிழ்நாட்டில் வானில் பிறை தென்படாததால் நாளை முதல் ரம்ஜான் நோன்பு., தலைமை காஜூ தகவல்!!!
தமிழ்நாட்டில் வானில் பிறை தென்படாததால் நாளை முதல் ரம்ஜான் நோன்பு., தலைமை காஜூ தகவல்!!!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் அல்லாஹ்வின் கருணையை முழுமையாக பெறுவதற்காக ரம்ஜானுக்கு முன்னதாக கடுமையான நோன்பு இருப்பார்கள். இத்தகைய நோன்பு நோற்பவர்கள் சூரிய உதயத்திற்கு முன்னதாக மட்டும் உணவுகளை எடுத்து கொள்வார்கள்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன்பின் முழுநாளும் உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்து சூரிய அஸ்தமனத்தின் போது நோன்பை முடித்து உணவினை எடுத்து கொள்வார்கள். இப்படியாக ஒவ்வொரு ஆண்டும் வானில் பிறை தென்பட்டதற்கு பிறகு 29 முதல் 30 நாட்கள் வரை ரமலான் நோன்புகளை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் வானில் பிறை தென்படாததால் நாளை (மார்ச் 24) முதல் நோன்புகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.

Climax படப்பிடிப்பில் தீவிரம் காட்டும் படக்குழு.., அனல் பறக்கும் “கேப்டன் மில்லர்” ஷூட்டிங்!!

தமிழ்நாட்டை பொறுத்தவரை சவூதி அரேபியாவில் நோன்பு மேற்கொண்ட அடுத்த நாள் தான் ரம்ஜான் நோன்பு தொடங்கும். அதன்படி சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்கள் நேற்று வானில் பிறை பார்த்துவிட்டு இன்று முதல் நோன்பினை தொடங்கி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here