Climax படப்பிடிப்பில் தீவிரம் காட்டும் படக்குழு.., அனல் பறக்கும் “கேப்டன் மில்லர்” ஷூட்டிங்!!

0

இயக்குனர் அருண்மாதேஸ்வரன் படைப்பில் நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் குறித்து இணையத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

கேப்டன் மில்லர்:

நடிகர் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். மேலும் வரலாற்று பின்னணியில் உருவாகும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுபோக இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன், மாநகரம் சந்தீப் கிஷான், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த ஜெயிலர் திரைப்படம்.., ஷூட்டிங்கிற்காக கேரளா சென்ற ரஜினிகாந்த்.., இணையத்தில் கசிந்த தகவல்!!

இந்த நிலையில் இப்படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் Climax எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை மையமாக கொண்டு எடுத்து வருவது மட்டுமின்றி, போரில் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகளுடன் படப்பிடிப்பை படக்குழுவினர் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here