ராஜ மாதா ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம் – அரசு வழங்கிய புதிய கௌரவம்!!

0
ராஜ மாதா ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம் - அரசு வழங்கிய புதிய கௌரவம்!!
ராஜ மாதா ரம்யா கிருஷ்ணன் தோளுக்கு வளர்ந்து  நிற்கும் அவரின் ஒரே  மகன் - வைரலாகும் போட்டோ!!

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு துபாய் அரசு கோல்டன் விசா வழங்கி சிறப்பித்துள்ளதையடுத்து, இது குறித்த போட்டோவை வெளியிட்டு முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முக்கிய பதிவு:

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகருடன் நடித்துள்ளார். இவர், பிரமாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி என்ற படத்தில் ராஜமாதாவாக நடித்து புகழின் உச்சியில் உள்ளார். இந்த நிலையில், துபாய் அரசு இவருக்கு கோல்டன் விசா வழங்கி சிறப்பித்துள்ளது.

இது குறித்து, பதிவிட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த கோல்டன் விசாவை பெற்று தந்த ஜே.பி.எஸ் குரூப் நிறுவனத்திற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். மேலும், தனக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்ட புகைப்படத்தையும் சேர்த்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, விஜய் சேதுபதி, பார்த்திபன், த்ரிஷா மற்றும் மீனா ஆகியோருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, ரசிகர்கள் பலரும், ரம்யா கிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here