மத்திய கல்வித்துறை அமைச்சர் பதிவியில் இருந்து ரமேஷ் பொக்ரியால் ராஜினாமா.. முழு விவரம் உள்ளே!!!

0

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ராஜினாமா செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருடன் சேர்த்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார், குழந்தைகள்- பெண்கள் நலத்துறை அமைச்சர் தபாஸ்ரீ சௌத்ரி அவர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

இந்தியாவில் பிரதமர் தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி புரிந்து வருகிறது. தற்போது இன்று மாலை மத்திய அமைச்சரவை மாற்றப்படவுள்ளது. ஏற்கனவே முன்னாள் நுகர்வோர் விவகார துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் காலமானது, மத்திய சமூகநலத் துறை அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடகா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டது போன்றவற்றால் அமைச்சரவையில் பதவிகள் காலியாக உள்ளன.

 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய அமைச்சர்களாக இன்று மாலை 6 மணிக்கு 43 பேர் டெல்லியில் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு இன்று மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்பவர்கள் பிரதமர் மோடி உடனான சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here