51வது தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிகாந்த்துக்கு வழங்க மத்திய அரசு முடிவு – ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாரான ரஜிகாந்த்திற்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தாதா சாகேப் பால்கே விருது

இந்திய திரைப்பட துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு தரப்படுவது தான் இந்த தாதா சாகேப் பால்கே விருது. திரைப்பட துறையின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே என்பவரின் பிறந்த நாளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நடிகர்களை தேர்வு செய்து வழங்கும். ஏற்கனவே இந்த விருதை கே.பாலசந்தர், அமிர்தபட்சன், சிவாஜி போன்றோர் வாங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினி காந்திற்கு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினி காந்த பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது வரை முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

70 வயதிற்கு மேலாகியும் ஸ்டைலிலும் சரி, நடிப்பிலும் சரி அவரை மிஞ்ச ஆள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.  தற்போது 51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதனால் ரஜினிக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த விருது இந்த ஆண்டு ஒரு தமிழ் நடிகருக்கு கிடைத்தது மிகவும் பெருமையாகவும் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here