ஒரே படத்தில் மார்க்கெட்டை இழந்த நெல்சன் – கைவிட்டு போகும் தலைவர் 169! சன் பிக்சர்ஸ் எடுக்கும் முடிவு!!

0
ஒரே படத்தில் மார்க்கெட்டை இழந்த நெல்சன் - கைவிட்டு போகும் தலைவர் 169! சன் பிக்சர்ஸ் எடுக்கும் முடிவு!!
ஒரே படத்தில் மார்க்கெட்டை இழந்த நெல்சன் - கைவிட்டு போகும் தலைவர் 169! சன் பிக்சர்ஸ் எடுக்கும் முடிவு!!

ரஜினி நடிக்க உள்ள, அவரது 169 வது படத்தை நெல்சன் இயக்க உள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த வாய்ப்பு வேறு இயக்குனருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக இணையத்தில் தகவல் கிடைத்துள்ளது.

கைநழுவிய வாய்ப்பு:

விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி, கடந்த இரு தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை, நெல்சன் இயக்குவதற்கு முன்பே ரஜினியின் 169 வது படத்தை தான் இயக்க உள்ளதாக அறிவித்துவிட்டார். தற்போது பீஸ்ட் படம், எதிர்பார்த்த அளவு வெற்றி அடையாததால் தலைவர் 169 படத்தை நெல்சன் இயக்குவது குறித்த முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை, நெல்சனிடம் கொடுப்பது பற்றி, சன் பிக்சர்ஸ் தீவிர யோசனையில் இருப்பதாகவும், இந்த முடிவை ரஜினியிடம் விட்டு விடப் போவதாக முடிவெடுத்துள்ளதாகவும் பேசப்படுகிறது. நெல்சன் இந்த படத்தை இயக்கவில்லை எனில், இயக்குனர் அட்லீ அல்லது தேசிங்கு பெரியசாமி இந்த படத்தை இயக்குவார் என்றும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here