கட்சி நிர்வாகிகளுடன் ரஜினி பரபரப்பு ஆலோசனை..! இடைத்தேர்தலில் களமிறங்க திட்டம்..?

0

தமிழகத்தில் குடியத்தான் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகள் காலியாக உள்ளதால் அதற்கான இடைத்தேர்தல் நடத்தும் ஆலோசனையில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. இதில் ரஜினி போட்டியிட போவதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

திமுக எம்எல்ஏ.,க்கள் மரணம்..!

சமீபத்திய நிகழ்வான திமுக  எம்எல்ஏக்கள் கே.பி சாமி  மற்றும் காத்தவராயன் காலமானாதல் திருவொற்றியூர்  மற்றும் குடியாத்தம் தொகுதிகள் காலியாகி உள்ளனர். இதனால் சட்டபேரவை  செயலாளர் குடியத்தான் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளித்துள்ளார். தேர்தல் ஆணையமும் அதை தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இடைத்தேர்தல் தேதியை வெளியிடுமா ??

தமிழகத்தில் சட்டப்படி  அடுத்த ஆண்டு மே மாதம் 24ஆம் தேதியுடன் தற்போதைய சட்டமன்ற பதவி காலம் முடிவடைகிறது . பொதுவாக தமிழகத்தின் பொது தேர்தலில் 1 ஆண்டுக்கு குறைவான  காலகட்டம் இருக்கும்போது இடைதேர்தல் நடத்தும் வழக்கம் கிடையாது. ஆனால் அதற்கு முன்பே தொகுதி காலியானால் அதாவது காலியானதாக அறிவிக்கபட்டால் அறிவிக்கப்பட்ட 6 மாதத்திக்குள்  இடை தேர்தல் நடத்த வேண்டும். அதனால் 6 மாதத்திற்குள் குடியாத்தான் மற்றும் திருவொற்றியூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதிமுக வின் திட்டம்

இதற்கிடையில் ஆதிமுக விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் வென்ற அதே யுக்தியில் திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் வெல்ல முடியும் என்று நம்புகிறது. அதனால் அதிமுக இத்தேர்தலை நடத்த ஆர்வம் காட்டுகின்றனர்.

ரஜினி களம் இறங்குவாரா??

ரஜினி அடுத்த சட்டமன்ற  தேர்தலில் களம் இறங்குவதாக 2 ஆண்டுக்கு முன்னதாகவே அறிக்கை வெளியிட்டார். இதற்கிடையில் ரஜினி மே மாதத்திற்குள் கட்சி அறிவிப்பை வெளியிட்டால் இந்த இடைத்தேர்தலில்  வேட்பாளராக அவர் கட்சி சார்பில் நிறுத்தப்படுவார்களா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. இதனால் ரஜினி தன்  குடும்பத்தார் உடன் பரபரப்பாக ஆலோசனையில் இறங்கி உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here