தனியார் பள்ளிகளுக்கு புதிய நடைமுறை., கட்டண வசூலுக்கு கட்டுப்பாடு! நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு!!

0

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட தனியார் கல்வி ஒழுங்குமுறை மசோதா 2023 ஐ, தனியார் பள்ளிகள் அமைப்பு எதிர்த்து வருகிறது.

அரசுக்கு எதிர்ப்பு:

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே, தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், ராஜஸ்தான் அரசு, தனியார் கல்வி ஒழுங்குமுறை மசோதா 2023 ஐ சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

அதன்படி, ஒழுங்குமுறை ஆணையத்தை நடத்த அரசின் அனுமதியின்றி 1% கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமானது என உத்தரவிட்டது. இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் அமைப்பு போர்க்கொடி உயர்த்தியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த, தனியார் பள்ளி நிர்வாகிகள் கடந்த கோவிட் காலகட்டத்தில் மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் பெறவில்லை என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் எனவும், இந்த காலத்தில், ஏற்பட்ட நிதி இழப்பிலிருந்து பல பள்ளிகள் இன்னும் மீளவில்லை என்பதால், அரசு இதுபோன்ற ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்து தனியார் பள்ளிகளை படுகுழியில் தள்ள வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here