தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு., லீவு எடுக்க இத செஞ்சே ஆகணும்..,பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!!

0

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர் வருகை பதிவுகளை கணினி முறையில் பதிவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விடுமுறை விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சுமார் 35,000 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சாதாரண விடுப்பு, மருத்துவ விடுப்பு என விடுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இப்படியான விடுமுறைகளுக்கு ஆசிரியர்கள் “லீவ் மேனேஜ்மென்ட் சிஸ்டம்” என்ற செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பின்னர் இந்த விண்ணப்பம் தலைமை ஆசிரியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் நேரடி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மேலும் இந்த விவரங்கள் அனைத்தும் சென்னை பள்ளிக்கல்வித்துறை கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து இந்த செயலியில் ஆசிரியர்களின் மீதமுள்ள விடுப்பு விவரங்களையும் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here