பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல் – மாற்றுப்பாதையில் ரயில்கள் இயக்கம்.,, ரயில்வே துறை அறிவிப்பு!!

0

ஒவ்வொரு மாவட்டங்களிலும் தண்டவாள சீரமைப்பு பணி நடைபெறுவது வழக்கம், இந்த சீரமைப்பு பணி நடைபெறும் நாட்களில் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். அந்த வகையில் தற்போது கோவையில் தண்டவாள சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் இன்று முதல் ஐந்து ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம்:

ரயில் போக்குவரத்து சேவை மிகவும் குறைவான விலையில், சாமானிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா காலகட்டத்தில் பொதுமுடக்கம் அமலில் இருந்த காரணத்தால் ரயில் சேவைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் அதிகமான ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தாக்கம் குறைந்து அனைத்து வகையான ரயில் சேவைகளும் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோயம்புத்தூர் – போத்தனூர் மார்க்கத்தில் (செப் 12) இன்று முதல் அக்டோபர் 18 வரை (37 நாட்களுக்கு) பொறியியல் பணி நடக்க உள்ளதால், பல்வேறு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் பிலாஸ்பூர்- எர்ணாகுளம் வாராந்திர ரயில் (22815) இன்று, 19, 26, அக்டோபர் 3, 10, 17 ம் தேதிகளில் கோவைக்கு செல்லாமல் மாற்றுப்பாதையாக இருகூர்-போத்தனூர் மார்க்கத்தில் இயக்கப்படுகிறது.

இதை தொடர்ந்து திருநெல்வேலி-தாதர் வாராந்திர எக்ஸ்பிரஸ் (22630) வரும் 14, 21, 28, அக்டோபர் 5, 12ம் தேதிகளிலும், பிலாஸ்பூர்-திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் (22619) வரும் 13, 20, 27, அக்டோபர் 4, 11, 18ம் தேதிகளிலும் இருகூர் -போத்தனூர் வழியே இயக்கப்படுகிறது. அதேபோல் பாட்னா-எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (22670) வரும் 13,20 17, அக்டோபர் 4, 11, 18ம் தேதிகளிலும், செகந்திராபாத்-எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (07189) வரும் 16, 23, 30, அக்டோபர் 7, 14ம் தேதிகளிலும் மாற்றுப்பாதையாக இருகூர்-போத்தனூர் வழியே செல்கிறது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here