கோபியின் திருமணத்தில் சமைக்கும் ஆர்டரை பெறும் பாக்கியா – கவலைக்கிடமான குடும்பம்!! பாக்கியலட்சுமி ப்ரோமோ!!

0

பாக்கியா தனது முதல் ஆர்டருக்காக காத்துக் கொண்டிருக்கும் வேளையில் கோபியும் சந்துருவும் சென்று திருமணத்திற்காக மண்டபத்தை புக் செய்கிறார்கள். மேலும், கோபியின் திருமணத்தில் சமைக்கும் ஆர்டரை பாக்கியா வாங்கி கொள்ளும்படியான புரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் குடும்பத்திற்காக நிறைய உழைக்க வேண்டும் என பாக்கியா முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதற்காகவே ஒரு மிகப் பெரிய கம்பெனியில் ஆர்டர் கிடைக்க வேண்டுமென பாக்கியா காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ஒரே நேரத்தில் ஆறு மண்டபத்திற்கு சமைக்கும் ஆர்டர் கிடைக்க வேண்டுமென்றால் முதலில் உங்களது திறமையை சோதிக்க வேண்டும் என அந்த நிறுவனத்தின் குழுவினர் கூறியிருந்தார். அதற்காக முதலில் ஒரு மண்டபத்தில் நீங்கள் சமைக்க வேண்டும். அந்த மண்டபத்தில் நீங்கள் நன்றாக சமைத்து விட்டால் 6 மண்டபத்தில் சமைக்கும் ஆர்டரை தருவேன் என கூறியிருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் பாக்கியா தனது முதல் ஆர்டருக்கு காத்துகொண்டிருக்கும் சமயத்தில் மூர்த்தியும் சந்துருவும் அந்த சமையல் நிறுவனரை சென்று சந்தித்து மண்டபத்தை புக் செய்கிறார்கள். அதாவது கோபி மற்றும் ராதிகாவின் திருமணத்திற்கான ஆர்டரை அந்த நிறுவனர் பாக்கியாவிற்கு தருகிறார்.

மேலும், கோபியின் திருமணத்திற்கு தான் சமைக்கப் போகிறோம் என தெரியாமலேயே அந்த ஆர்டரை பாக்கியா ஏற்றுக்கொள்கிறார். கோபியின் திருமணத்திற்கு தான் சமைக்கப் போகிறோம் என தெரிந்த பிறகும் கூட ஆர்டரை பாக்கியா ஏற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இதனால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here