குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 பொங்கல் பரிசு – முதல்வர் அறிவிப்பால் உற்சாகத்தில் பொதுமக்கள்!!

0

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு 1000 ரூபாய் ரொக்கப்பணம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று புதுச்சேரி மாநில அமைச்சர் அறிவித்துள்ளார்.

 பொங்கல் பரிசு :

தமிழகத்தில் வருடந்தோறும் தை முதல் முதல் நாள் தமிழர்களின் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசோடு சேர்த்து 21 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நம் அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழகத்தைப் போலவே இந்த மாநிலத்திலும், 480 ரூபாய் மதிப்பிலான பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது.

அதுபோல வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச வேட்டி சேலை மற்றும் துண்டு வழங்கப்படும். இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்தது. அதனால், புதுச்சேரியில் உள்ள 1,27,789 வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் ரேஷன் கார்டுதாரர்களில் ஒரு நபர் கொண்ட பயனாளர்களுக்கு 500 ரூபாயும்,2 நபர்களுக்கு மேற்பட்ட குடும்ப நபர்களை கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரூபாயும் கொடுக்கப்படும் என்றும், இந்த பணம் 13.01.2022 அன்று குடும்ப தலைவி வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அமைச்சர் அண்மையில் பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here