மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 3 சுற்று நிறைவு – காளையிடம் திமிரிய 22 காளையர்கள் காயம்!!

0

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை அவனியாபுரத்தில் தற்போது நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் 3 சுற்றுக்கள் நிறைவடைந்த நிலையில், இதுவரை 229 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

மூன்று சுற்றுகள் நிறைவு :

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தற்போது மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெற்றிகரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை மூன்று சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை 229 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதில், காளை முட்டியதில் பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் என 22 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவத் துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போதைய சுற்று வரை, 15 காளைகளை அடக்கி முருகன் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.

சற்று நேரத்துக்கு முன், இவரை மாடு முட்டியதில் வலது கண்ணில் காயம் ஏற்பட்டதால், தற்காலிக சிகிச்சை மையத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் போக, கார்த்தி என்பர் 10 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேலும், மாடு முட்டியதில் படுகாயமடைந்த 8 மாடுபிடி வீரர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here