நாளை முதல் களமிறங்கும் PUBG விளையாட்டு – குதூகலத்தில் இளைஞர்கள்!!

0

இந்தியாவில் பப்ஜி செயலி தடை செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் உருவெடுத்துள்ளது. மேலும் முன்பதிவிற்காக இன்றிலிருந்து play store-ல் PUBG (இந்தியா) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

பப்ஜி செயலி

பப்ஜி எனப்படும் மொபைல் கேம் மின் பயன்பாடு மற்றும் செயல்திறன் அனைவரையும் விளையாட தூண்டும் வகையில் அமைந்து இருக்கும். இந்த விளையாட்டை குறித்த சர்ச்சைகள் எழுந்தன. மேலும் இந்த விளையாட்டிற்காக தனது நேரத்தை வீணடித்தவர்கள் நிறைய பேர் உண்டு.

இரவு பகல் பாராமல், எப்பொழுதும் மொபைலும் கையுமாக தங்களை அதில் ஈடுபடுத்தியவர்கள் அதையே முழு நேர வேலையாகவும் வைத்திருந்தனர். இதில் இளைஞர்கள் தான் அதிக பாதிப்படைந்தனர். சிலர் தற்கொலை செய்யும் அளவிற்கு கூட சென்றனர். இதனால் தான் பப்ஜி செயலிக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் பப்ஜி செயலி உருவெடுத்துள்ளது. தற்போது PUBG (இந்தியா) இன்று முதல் முன்பதிவுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது எனவும், நாளை முதல் அதிகாரப்பூர்வமாக வெளியிட போவதாகவும் அந்த நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது. இதனால் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஆனால் பெற்றோர்களுக்கு இது வேதனை அளிக்கும் செயலாகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here