தளபதி விஜய் பிறந்த நாளில் கண்டிப்பாக இந்த 2 விஷயங்கள் இருக்கும்?? என்னென்ன தெரியுமா??

0

தமிழ் சினிமாவில் தளபதி என்று அழைக்கபடும் விஜயின் பிறந்தநாள் வருகிற 22ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு முக்கிய 2 அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதற்கான தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்:

தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் என்ற அந்தஸதை பெற்று பல பிளாக்பஸ்டர் ஹிட்களை கொடுத்தவர் தான் தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்து திரைக்கு வந்த படம் தான் மாஸ்டர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வந்தது.

அதுமட்டுமல்லாமல் வசூலிலும் புதிய சாதனை படைத்தது. மேலும் திரையரங்குகள் 50 சதவீத இருக்கையுடன் செயல்பட்ட நிலையில் கூட முதல் நாள் வசூலில் புதிய சாதனையை மாஸ்டர் திரைப்படம் படைத்தது. மாஸ்டர் வெற்றிக்கு பின்பு தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் தனது 65 வது படத்தை நடித்து வருகிறார்.

இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. தற்போது தமிழகத்தில் பரவும் கொரோனா அச்சம் காரணமாக தளபதி 65 படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தளபதி 66 படத்தை இயக்கும் இயக்குனர் பற்றி தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் தளபதி விஜயின் பிறந்தநாள் வருகிற 22ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 65 போஸ்டர் மற்றும் தளபதி 66 இயக்குனர் தயாரிப்பாளர் யார் என்பதற்கான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 66 ஐ தெலுங்கு இயக்குனர் இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here