தொடர்ந்து பெய்து வரும் கனமழை.., 144 தடை விதித்து உத்தரவிட்ட மாநில அரசு.., பொதுமக்கள் அவதி!!!

0
தொடர்ந்து பெய்து வரும் கனமழை.., 144 தடை விதித்து உத்தரவிட்ட மாநில அரசு.., பொதுமக்கள் அவதி!!!

தமிழ்நாடு, கேரளா, கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் சில நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதில் ஹிமாச்சலப் பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய வட மாநிலங்களில் கனமழை இடைவிடாது கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் நகரின் பல இடங்களில் வெல்ல பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் பொதுமக்களின் நலனுக்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களை வேறு இடங்களில் தங்க வைத்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகள் பணிகளை மேற்கொள்வது மிகவும் சவாலாக உள்ளது.

மயில்சாமி வீட்டில் அடுத்தடுத்து நடந்த சோகம்., பரவிய தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி !!

எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியேறினால் உயிரிழப்பு ஏற்படுவதற்கு கூட அதிக வாய்ப்புள்ளது. இதனால் யாரும் வெளியே நடமாடக் கூடாது என்பதற்காக டெல்லியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் அனைவரும் தடையை மீறி வெளியே வரக்கூடாது என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here