காற்றில் உள்ள நைட்ரஜனில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி – 100 நிலையங்கள் அமைப்பு!!

0

கொரோனா தொற்றின் தீவிர தாக்கத்தினால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை பூர்த்தி செய்யும் வகையில் 100 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை எண்ணெய் மற்றும் எரிவாயு பொதுத்துறை நிறுவனங்கள் மருத்துவமனைகளில் நிறுவ துவங்கியுள்ளன.

ஆக்ஸிஜன் உற்பத்தி :

தற்போது பரவிவரும் கொரோனா தொற்றினால் மக்கள் மூச்சு திணறல் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். எனவே இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் இயங்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு பொதுத்துறை நிறுவனங்கள், நாட்டின் திரவ மருத்துவ ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்ய முனைப்புடன் பணியாற்ற துவங்கியுள்ளன.

மேலும் உத்தரப் பிரதேசம், பிஹார், கர்நாடகா, கோவா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் டில்லியில் உள்ள மருத்துவமனைகளில் சுமார் 100 பி.எஸ்.ஏ. மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை நிறுவும் பணி துவங்கியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

200 முதல் 500 படுக்கைகள் வரை உள்ள பெரிய மருத்துவமனைகளில் வெவ்வேறு உற்பத்தி திறனுடன் கூடிய ஆலைகள் அமைக்கப்படவுள்ளது. ‘காற்றில் உள்ள நைட்ரஜனை கொண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும். ஆக்சிஜன் உற்பத்தி மையங்களுக்கான ஆர்டர்கள் இந்திய நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளது எனவும் ஜூலை மாதத்திற்குள் அனைத்து ஆலைகளும் செயல்படும் எனவும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஆக்சிஜன் தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here