பாலைவனத்தில் சிக்கித் தவிக்கும் படக்குழு – பிரபல ஹீரோ உருக்கம்..!

0

ஜோர்டானில் தங்கள் படக்குழு சிக்கிக்கொண்டதாக நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிளஸ்சி இயக்குகிறார்.

ஆடுஜீவிதம் படக்குழு..!

நடிகர் பிருத்விராஜ். இதில் அமலா பால், வினீத் ஶ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லக்‌ஷ்மி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இயக்குனர் பிளஸ்சி, ஹீரோ பிருத்விராஜ் உட்பட சுமார் 58 பேரைக் கொண்ட இந்தப் படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன், ஷூட்டிங்கிற்காக ஜோர்டான் சென்றது. அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பு நடந்ததுகொண்டிருந்த போதுதான், கொரோனா தீவிரம் அடைந்தது.

பிருத்விராஜ் தகவல்..!

இந்நிலையில் இந்திய தூதரகத்தின் மூலம் சிறப்பு அனுமதி பெற்று ஏப்ரல் 10-ம் தேதி வரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள, அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா தீவிரம் காரணமாக, அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டதாகவும் இந்தியா திரும்ப விரும்புவதாகவும் நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 ஆம் தேதி எங்கள் படத்தின் ஷூட்டிங், ஜோர்டானில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பிறகு நடந்த பரிசோதனைக்குப் பிறகு நாங்கள் பாதுகாப்பாகப் படப்பிடிப்பை நடத்துகிறோம் என்று தெரிந்ததும் எங்கள் ஷூட்டிங் தொடர அனுமதி அளிக்கப்பட்டது.

திரும்ப வேண்டும்..!

துரதிர்ஷ்டவசமாக ஜோர்டானில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. இதன் காரணமாக, கடந்த 27 ஆம் தேதி எங்கள் ஷூட்டிங் அனுமதி ரத்து செய்யப்பட்டது.

எங்கள் குழுவில் ஒரு மருத்துவர் இருக்கிறார். அவர் 72 மணி நேரத்துக்கு ஒரு முறை எங்களை சோதனை செய்கிறார். ஜோர்டான் அரசால் நியமிக்கப்பட்டுள்ள மருத்துவராலும் நாங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறோம். இந்நிலையில், உடனடியாக மீண்டும் படப்பிடிப்பு தொடங்க சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிடைக்கும் வாய்ப்பில் ஊருக்குth திரும்ப வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமாக இருக்கிறது.

எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் இந்த வாழ்க்கை மீண்டும் சகஜமாக மாறும் என்று நம்புவோம். இவ்வாறு நடிகர் பிருத்விராஜ் கூறியுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here