ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு வேலை நியமனம்.., மோடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு வேலை நியமனம்.., மோடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு வேலை நியமனம்.., மோடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு வேலை நியமனம்.., மோடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

கடந்த மாதம் தொடங்கிய வேலை வாய்ப்பு விழாவின் கீழ், தற்போது புதிதாக பணியில் சேர்க்கப்பட்டவர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

இந்தியாவில் படிப்பை முடித்த இளைஞர்கள் படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் அல்லல்பட்டு வருகின்றனர். அவர்களுக்காக ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு முகாம் வெவ்வேறு மாவட்டங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி கிட்டத்தட்ட 10 லட்சம் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த விழாவில் 75000 பேருக்கு இந்த திட்டத்தின் கீழ் பணி நியமன கடிதம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது வேலைவாய்ப்பு வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இன்று நடந்த இந்த விழாவில் புதிதாக பணியில் சேர்க்கப்பட்ட 71,000 பேருக்கு பணி ஆணைகளை பிரதமர் காலை 10.30 மணியளவில் காணொலி மூலம் வழங்கினார்.

தமிழக இளைஞர்களுக்கு குட் நியூஸ்., 4000 பேருக்கு வேலை ரெடி! அரசின் அதிரடி அறிவிப்பு!!

இந்த விழாவில் தேர்வாகும் பணியாளர்கள் சென்னை உட்பட நாடு முழுவதும் 45 இடங்களில் புதிய பணி ஆணைகள் நேரடியாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்கள், மருந்தாளர்கள், விரிவுரையாளர்கள், செவிலி அதிகாரிகள், ஆசிரியர்கள், செவிலியர்கள், ரேடியோ கிராபர்கள், துணை மருத்துவம் போன்ற பணிகளில் நியமிக்கப்பட இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here