பிரதமர் மோடி கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்ட DM உடன் மே 18, 20ம் தேதி ஆலோசனை!!!

0
பிரதமர் மோடி கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்ட DM உடன் மே 18, 20ம் தேதி ஆலோசனை!!!
பிரதமர் மோடி கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்ட DM உடன் மே 18, 20ம் தேதி ஆலோசனை!!!

பிரதமர் மோடி கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்ட DM உடன் மே 18, 20ம் தேதி ஆலோசனை : 

கொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்கு எதிராக நாடு போராடுவதால், பிரதமர் நரேந்திர மோடி அதிக கோவிட் கேசலோட் கொண்ட மாவட்டங்களின் டிஸ்டரிக்ட் மாஜிஸ்திரேட் உடன் மே 18, 19ம் தேதிகளில் உரையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டங்களில் முதல்வர்களும் கலந்து கொள்வார்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மே 18, 20ம் தேதி ஆலோசனை :

இந்த கூட்டம் மே 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும், இதன் முறையே 9 மாநிலங்களில் 46 மாவட்டங்களின் டி.எம் மற்றும் 10 மாநிலங்களில் 54 மாவட்டங்களில் டி.எம் களுடனும் இந்த ஆலோசனை நடைபெறும். இந்த உரையாடலின் போது, ​​அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்களும் கூட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்று அரசாங்க வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

முன்னதாக புதன்கிழமை, பிரதமர் மோடி கோவிட்டை சமாளிக்க ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் கிடைப்பது மற்றும் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய ஒரு உயர்மட்ட கூட்டத்தில் தலைமை ஏற்று ஆலோசனை நடத்தினார். மருந்துகளின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்குவதற்கும் உற்பத்தியாளர்களுடன் அரசாங்கம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கோவிட் நிலைமை குறித்து கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் டெல்லி சுகாதார அமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here