தமிழத்தில் வேகமெடுக்கும் கொரோனா – ஆபத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டம்!!!

0

கொரோனா 2ஆம் பரவல் நாளுக்கு நாள் வேகம் எடுக்கிறது. அதன் படி கடந்த 2 வாரங்களில் சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக தொற்று பதிவாகி உள்ளது.

கொரோனா தொற்று கோர தாண்டவம்:

தமிழகத்தில் கொரோன தொற்று கோரதாண்டவம் ஆடுகிறது. இதனை தொடர்ந்து இப்போது தமிழகம் முழுவதிலும் லாக்டவுன்  போடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தற்போது கடந்த 2 வாரங்களில் சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் தொற்று கட்டுக்குள் வரவில்லை என்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் இந்தியாவில் 4,205 பேர் இறந்துள்ளனர் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் இந்தியா கண்டிராத மிக உயர்ந்த இறப்பு எண்ணிக்கை இதுவாகும். நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோன 2ஆம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்பில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here