கோடிக்கணக்கில் நாமம் போட்ட பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்.., மதுரை கோர்ட்டில் சரண் – சூடுபிடிக்கும் வழக்கு!!

0
கோடிக்கணக்கில் நாமம் போட்ட பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்
மக்களை கவரும் விதமாக பழைய நகையை கொடுத்தால் அதிக வட்டிக்கு பணம் தருவதாக கூறி பிரணவ் ஜுவல்லரி அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களில் ஏராளமானோர் நகையை கொடுத்தனர் அதுமட்டுமின்றி நெறய பேர் லட்சம் முதல் கோடி வரை முதலீடும் செய்தனர். இப்படி மக்கள் அந்த கடையை நம்பி கோடிக்கணக்கான பணங்களை முதலீடு செய்த நிலையில் திடீரென பிரணவ் ஜுவல்லரி நிர்வாகம் தங்களது கிளைகளை மூடியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறை தலைமறைவான கடை உரிமையாளர் மதன் செல்வராஜை தேடி வந்தனர். போலீஸ் தீவிரமாக தேடி வந்த நிலையில் மதன் செல்வராஜ் தானாகவே முன் வந்து மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு ( டான்பிட்) நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை வருகிற 21ம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஜோதி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here