அரசு பள்ளிக்கு வந்த புதிய சிக்கல்…, போராட்டம் நடத்த முடிவெடுத்த பெற்றோர்கள்!! 

0
அரசு பள்ளிக்கு வந்த புதிய சிக்கல்..
ஒவ்வொரு மாநில அரசும் பள்ளி குழந்தைகளின் நலனுக்காக, பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில், குறிப்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை, மத்திய உணவு, ஒரு சில மாநிலங்களில் காலை உணவு உள்ளிட்டவைகளை வழங்குகின்றன. மேலும், கற்பித்தல் பணியும் சிறப்பாக நடை பெறுவதால் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும், அரசு பள்ளியை காப்பாற்ற கோரி போராட்டம் நடத்த உள்ளதாக கர்நாடக மாநிலத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது, சூரத் கல்லில் உள்ள தட்சிண கன்னடா ஜில்லா பஞ்சாயத்து மேல்நிலைப் பள்ளியில் ஒரு காலத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்றுள்ளனர். ஆனால், தற்போது 24 மாணவர்கள் மட்டும் பள்ளியில் பயின்று வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம், பள்ளியின் உள்கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட பல வசதிகள் பற்றாக்குறை தான் என்று கூறுகின்றனர். இதனை சரி செய்து இந்த அரசு பள்ளியை பாதுகாக்க வேண்டும் டிசம்பர் 28 ஆம் தேதி பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளூர் வாசிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here