சினிமாவிலிருந்து பிரேக் எடுக்கும் பிரபாஸ் – தொடர் தோல்வியால் விபரீதம்! நடிகரின் முடிவால் கதறும் ரசிகர்கள்!!

0
சினிமாவிலிருந்து பிரேக் எடுக்கும் பிரபாஸ் - தொடர் தோல்வியால் விபரீதம்! நடிகரின் முடிவால் கதறும் ரசிகர்கள்!!
சினிமாவிலிருந்து பிரேக் எடுக்கும் பிரபாஸ் - தொடர் தோல்வியால் விபரீதம்! நடிகரின் முடிவால் கதறும் ரசிகர்கள்!!

சாஹோ படத்தில் நடித்தபோது, நடிகர் பிரபாஸ் காலில் ஏற்பட்ட காயத்தை சரி செய்ய மூன்று மாத காலம் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அமெரிக்கா செல்லும் பிரபாஸ்:

பாகுபலி என்ற படத்தின் வாயிலாக, இந்திய சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் நடிகர் பிரபாஸ். அண்மையில், இவர் நடிப்பில் இயக்குனர் கிருஷ்ண குமார், இயக்கத்தில் வெளிவந்த ராதே ஷ்யாம் என்ற படம் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை. இந்த படம் 100 கோடிக்கு மேல், நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால், இவர் மிகப் பெரிய மன உளைச்சலில் இருந்து வந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இவர் சாஹோ என்ற படத்தில் நடிக்கும்போது, காலில் அடிபட்டு பிரச்சனையில் தவித்து வந்ததாக, பேசப்பட்டது. இந்த நிலையில், இந்த பிரச்சனையை சரி செய்து கொள்ள, பிரபாஸ் மூன்று மாத காலம் அமெரிக்கா சென்று அங்கேயே தங்கி சிகிச்சை எடுக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே இவர் நடிக்கும் ஆதி புருஷ், சலார், ப்ராஜக்ட் கே, ஸ்பிரிட் உள்ளிட்ட மெகா பட்ஜெட் படங்கள் நிலுவையில் உள்ளதால், பிரபாஸின் இந்த முடிவு கேட்டு பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here