தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட புதிய வழிமுறைகள்., இந்த நாளில் இதை செய்ய தடை!!

0
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட புதிய வழிமுறைகள்., இந்த நாளில் இதை செய்ய தடை!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட புதிய வழிமுறைகள்., இந்த நாளில் இதை செய்ய தடை!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளான போகி தினத்தன்று, பிளாஸ்டிக் துணி போன்ற பழைய பொருட்களை எரிக்கக் கூடாது என திடக்கழிவு மேலாண்மை துறை அறிவித்துள்ளது.

வெளியான அறிவிப்பு:

தமிழகத்தில் அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக, பொங்கல் பண்டிகை முதல் நாளான போகி தினத்தன்று “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பதற்கு ஏற்ப, பலரும் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து போகி கொண்டாடுவார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

நாளடைவில் இந்த நிகழ்வு பிளாஸ்டிக், துணி மற்றும் டயர் போன்ற சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை எரித்துக் கொண்டாடும் நிகழ்வாக மாறிப்போனது. இது போன்ற, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை எரிக்கும் செயல், வருடம் தோறும் தொடர்கதை ஆகிவிட்டதால்,இதை தடுக்க திடக்கழிவு மேலாண்மை துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு பள்ளிகளுக்கு குவியும் சலுகை.., கல்வி துறை செய்த புதிய ஏற்பாடு!!

மக்கள் போகி அன்று துணி, நெகிழி மற்றும் டயர் போன்ற பொருட்களை எரிக்கக் கூடாது எனவும், அவற்றைத் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here