தமிழக அரசை சாடிய பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் – இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார்!!

0

பிரபல தனியார் சேனலில் தமிழ் செய்தி வாசிப்பாளராக உள்ள சவுதா மணி மீது, தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு பதிவு:

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தமிழ்ச் செய்தி வாசிப்பாளராகவும்,  பாஜக கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் இருப்பவர் சவுதா மணி. இவர் கடந்த 2017 ல் பா.ஜ.க கட்சியில் இணைந்தார். தற்போது கட்சியின்,  செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், தமிழகத்தின் ஆளும் அரசை ஒரு வீடியோவில் மோசமாக விமர்சித்துள்ளார். அதாவது, “தைரியமா? விடியலுக்கா?” என ஏக வசனத்தில் பேசி இவர் வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வந்தது.

இதுதொடர்பாக சவுதா மணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு – சைபர் கிரைம் போலீசில் இவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவர் மீது கலகம் செய்ய தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here