PMAY திட்டத்தின் மூலம் 2 கோடி பேருக்கு வீடு., எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் உள்ளே!! 

0
PMAY திட்டத்தின் மூலம் 2 கோடி பேருக்கு வீடு., எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் உள்ளே!! 
PMAY திட்டத்தின் மூலம் 2 கோடி பேருக்கு வீடு., எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் உள்ளே!! 

நாடு முழுவதும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு மானியங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (பிப்.1) தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் PMAY திட்டத்தின் மூலம் விரைவில் 3 கோடி வீடுகள் கட்ட இருப்பதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். அதன்படி இத்திட்டத்தின் கீழ் பலன்களை பெறுவதற்கான தகுதி உள்ளிட்ட விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,

  • மைதானம் பகுதியில் வீடு கட்டுபவர்களுக்கு ரூ.1.20 லட்சமும், மலைப்பகுதியில் வீடு கட்டுபவர்களுக்கு ரூ.1.30 லட்சமும் வழங்கப்படும்.
  • இத்திட்டத்தில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் மானியங்களை வழங்குகிறது.

தகுதிகள்:

  • வீடற்ற, ஒன்று (அ) இரண்டு அறைகள், கச்சா சுவர்கள், கச்சா கூரை போன்ற ஏதேனும் ஒரு வீடு கொண்ட குடும்பமாக இருக்கலாம்.
  • 25 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவு இல்லாத குடும்பத்தினர்,
  • 16 முதல் 59 வயது வரை உள்ள ஆண் உறுப்பினர் இல்லாத குடும்பம்,
  • ஊனமுற்ற உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம்,
  • நிலமற்ற, சாதாரண வேலை மூலம் வருமானம் பெறும் குடும்பங்கள்,
  • பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆதார், ஸ்வச் பாரத் மிஷன் (SBM) பதிவு எண், வேலை அட்டை, வங்கி பாஸ்புக், புகைப்படம், கைப்பேசி எண் ஆகியவை கொண்டு https://awaassoft.nic.in அல்லது umang app (https://web.umang.gov.in/landing/department/pmayg.html) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்

அல்லது கிராமத் தலைவர் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here