‘மனதின் குரல்’ நிகழ்ச்சி.,, கருத்து தெரிவிக்க மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!!

0
'மனதின் குரல்' நிகழ்ச்சி.,, கருத்து தெரிவிக்க மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!!
'மனதின் குரல்' நிகழ்ச்சி.,, கருத்து தெரிவிக்க மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!!

வரும் செப்டம்பர் 25,2022ல் ஒளிபரப்பாக உள்ள மன் கி பாத் (மனதின் குரல்)நிகழ்ச்சிக்கு கருத்துக்களை தெரிவிக்குமாறு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

மனதின் குரல் நிகழ்ச்சி:

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்த மாதம் மனதின் குரல் நிகழ்ச்சி 25ஆம் தேதி (செப்டம்பர் 25, 2022 ) ஒளிபரப்பாகவுள்ளது. அதாவது இந்த மனதின் குரல் நிகழ்ச்சி செப்டம்பர் 25, 2022 அன்று காலை 11 மணிக்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் ஒளிபரப்பாக உள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்குமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “#MannKiBaat” இந்தியா முழுவதும் பல்வேறு உள்ளீடுகள் மற்றும் ஊக்கமளிக்கும் கூட்டு முயற்சிகளால் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது. இது நமது சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

எப்போதும் போல, வரும் 25 ஆம் தேதி நடைபெறும் இந்த மாத அத்தியாயத்திற்கான, உங்கள் உள்ளீடுகளைப் பெற ஆவலுடன் காத்திருக்கிறேன். மைகவ், நமோ செயலியில் எழுதுங்கள் அல்லது 1800-11-7800 என்ற எண்ணில் அழைத்து உங்கள் செய்தியை பதிவு செய்யுங்கள். மேலும் 1922 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுக்கலாம் மற்றும் SMS மூலம் பெறப்பட்ட இணைப்பைப் பின்தொடர்ந்து பிரதமருக்கு நேரடியாகத் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here