உலக கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக்.., அவரே வெளியிட்ட தரமான பதிவு!!

0
உலக கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக்.., அவரே வெளியிட்ட தரமான பதிவு!!
உலக கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக்.., அவரே வெளியிட்ட தரமான பதிவு!!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் தனது கனவு நிஜமாகிவிட்டது என ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கனவு நனவானது

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கனவு காணுங்கள், அது உண்மையாகும்’ என தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் போது டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது தனது ‘கனவு’ என அடிக்கடி தினேஷ் கார்த்திக் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தினேஷ் கார்த்திக் சமீப காலமாக கிரிக்கெட் உலகில் கம்பேக் நாயகன் என்று அனைவராலும் புகழப்பட்ட வருகிறது. அண்மையில் நடைபெற்ற அனைத்து தொடர்களிலும் கூட இவர் ஒரு சிறந்த பினிஷாராக திகழ்ந்து வருகிறார். இவர் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கங்குலி முதல் டிராவிட், கும்ப்ளே, தோனி, கோலி, ரோகித், இப்போது கே.எல்.ராகுல் வரையில் பல கேப்டன்களுக்கு கீழ் விளையாடிய நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர்.

இவ்வளவு திறமையான வீரருக்கு பல போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. ஆனால் தற்போது அவரது விட முயற்சிக்கும், திறமைக்கும் தற்போது பலன் கிடைத்துள்ளது. இந்த இடம் கிடைப்பதற்கு அவர் போட்ட முயற்சி கொஞ்ச நஞ்சம் கிடையாது. தனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் தனது திறனை நிரூபித்து வந்தார். அது உள்ளூர் கிரிக்கெட், உலக கிரிக்கெட் என அவர் எந்த வேறுபாடு பார்க்கவில்லை. இந்நிலையில் அவர் T20 உலக கோப்பையிலும் தனது திறமையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here