மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் – புதிய கல்வி கொள்கை இன்று வெளியீடு!!

0
modi speech tommorrow evening
modi speech tommorrow evening

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அது இன்று மாலை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய கல்வி கொள்கை:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. மேலும் நாடு தழுவிய ஊரடங்கு இன்னும் 2 நாட்களில் ஜூலை 31 உடன் முடிவடைய உள்ளது. இன்று பிரதமர் மோடி தலைமையில் லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை கல்வி அமைச்சகம் என மாற்றம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில முதல்வர் அறிவிப்பு!!

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

மேலும் புதிய கல்வி கொள்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்த விபரங்களை அமைச்சர்கள் இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட உள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வேதுறை அமைச்சர் பியுஷ் கோயல், மனித மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், சுற்றுச்சூழல் துறை பிரகாஷ் ஜவடேகர், சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here