ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில முதல்வர் அறிவிப்பு!!

0

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இன்று 60,000 ஐ தாண்டியுள்ள நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ஆகஸ்ட் இறுதி வரை இரு வார ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்து உள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு:

மேற்குவங்க மாநிலத்தில் பரவும் கொரோனா வைரஸைத் தடுப்பதற்காக, அரசு இன்று இரு வார ஊரடங்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது. ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்கள் மாநிலம் முழுவதும் முழுமையான பணிநிறுத்தம் இருக்கும். ஆகஸ்ட் மாதத்தில், 5, 8, 16, 17, 23, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் கடுமையான ஊரடந்கு இருக்கும் என்று பானர்ஜி மேலும் தெரிவித்தார். கட்டுப்பாட்டு மண்டலத்தில் பொது முடக்கம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் இன்று தெரிவித்தார்.

இந்தியாவில் ஓயாத கொரோனா அலை!! ஒரே நாளில் 49,000 புதிய நோய் தொற்றுகள்!!

அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் போக்குவரத்து ஆகியவை மூடப்படும். அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்படும். பெட்ரோல் பம்புகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. நீதிமன்றங்களின் செயல்பாடு, வேளாண் துறைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்தல், உள்-மாநில மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொருட்கள் இயக்கங்கள் மற்றும் சமைத்த உணவை வீட்டுக்கு வழங்க அனுமதிக்கப்படும்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

West Bengal CM
West Bengal CM

டெல்லி, மும்பை, சென்னை, புனே, நாக்பூர் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களிலிருந்து கொல்கத்தா செல்லும் அனைத்து பயணிகள் விமானங்களையும் ஜூலை 31 வரை மாநில அரசு தடை செய்தது. மேற்கு வங்காளத்தின் சில நிலையங்களில் இருந்து புதன்கிழமை வந்து சேர அல்லது வரவிருந்த சிறப்பு ரயில்களையும் கிழக்கு ரயில்வே ரத்து செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here